"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

நடிகை ரோஜாவின் ஆபாச படம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பு!. ஆந்திர தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு!.
ஐதராபாத், மார்ச்.30-

நடிகை ரோஜாவின் ஆபாச படம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பானதால் ஆந்திர தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாக நடிகை ரோஜா இருக்கிறார். சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரிகிரி சட்டசபை தொகுதியில் அவர் கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டு உள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள நடிகை ரோஜாவின் புகழைக் கெடுக்கும் வகையில் ஆந்திராவில் அவருடைய ஆபாச படம் கடந்த வாரம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயவாடா, விஜயநகரம், அமலாபுரம், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி.களில் இந்த படம் ஒளிபரப்பானது.

5 நிமிடம் மட்டும் ஓடும் இந்த ஆபாச படத்தை தற்போது, விஷமிகள் சிலர் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பி வருகிறார்கள்.

இந்த படத்தில் நடிகை ரோஜா பூட்டிய அறைக்குள் பல ஆண்களுடன் தகாத உறவு கொள்வது போலவும், நீச்சல் குளத்தில் நீந்திக் குளிப்பதுபோலவும் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த படக் காட்சிகள் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த படத்தை முதலில் பார்ப்பவர்களுக்கு அது நடிகை ரோஜா என்றே நினைக்கத் தோன்றும். ஆனால், நடிகை ரோஜாவின் முகத்தை அப்படியே தனியே எடுத்து ஒரு ஆபாச நடிகையின் முகத்துடன் கச்சிதமாக பொருத்தி படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.

இது பற்றி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கூறுகையில், `இந்த ஆபாச படம் மார்பிங் முறையில் போலியாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை முன்பு எங்கள் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவர், அதை போலி என்று கண்டுபிடித்தார். தற்போது அதே படத்தை கேபிள் டி.வி.யில் வெளியிட்டும், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பியும் எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்' என்று குற்றம் சாட்டினார்கள்.

இந்த ஆபாச பட விவகாரம் குறித்து நடிகை ரோஜாவிடம் கேட்டபோது, `இது மாதிரியான சதித்திட்டங்கள் மூலம் எனது அரசியல் வாழ்க்கையை யாராலும் முடித்து விடமுடியாது. விரைவில் தேர்தல் கமிஷனிடம் இது பற்றி புகார் செய்வேன்' என்று கூறினார்.©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections